Friday, December 10, 2010

இடையில் நான்

பலமுறை பட்டும்
    
      பாசத்தால் பலவினமாய் 
       
               உள்ளதால்  ஒதுக்கபட்டவளாய்
          
                            உறவுகளுக்கு இடையில்
                  
                                  உயிரற்ற்றவல்லாய்  

                                   நான்

Tuesday, November 9, 2010

மாற்ற தக்கதல்ல

நான் தனித்திருக்க
 நினைக்கவில்லை
நீயில்லாத என் வாழ்வினை
வளமாக்க விரும்புகிறாய்  நீ ....

உன் உறவுகளை
உன்னிடத்தில் சேர்த்து விட்டு
உற்சாகமாய்
 உல்லாசமாய்
உறவற்றவலாய்
உரைக்கிறேன்

முயற்சிக்காதே
உன்னை நான் வெறுத்துவிட

முடிவை நான் தருகிறேன்
மனிதனாய்    இருந்தல்ல
மிருகமாய் மாறாமல்

 காத்திருந்து கண்டுகொள்
முடிவை....

Thursday, October 28, 2010

மௌனமாய்

எதை நான் சொல்ல 
முயன்றலும் தலையில்
 அடித்து கொள்ள்கிறாய்

 இல்லை அழ
 ஆரம்பித்து விடுகிறாய்

என் தவறினை
திருத்தி கொள்ள
வழி தெரியவில்லை
வாய் இல்ல ஊமைபோல
 வாழ முயற்சிகிறேன்

தலை விதி

என்னை காலடி மண்ணாக கூட
நினைக்காத இவுலகில்
தலையில் தூக்கிவைத்து
தாலாட்டு பாடினாய்
இல்லாத கனவெல்லாம்
இதயத்தில் தள்ளாடின

இன்று நீ கூட  தள்ளி விட்டாய்
என்னை தரையிலே தனிமையிலே...


ஒரு நாள் போதும் நீ
எதையும்  தாங்கி கற்றுக்கொள்ள

நானும் முயற்சிக்கிறேன்
தனிமையை ரசித்து
இனிமையாய் இருக்க....

எல்லோரும் சொல்ல்கிறார்கள்
சொந்தத்தின் பலத்தை
சொல்லவதற்கு கூட யாருமில்லை
சொந்தமென்று எனக்காய்.....

இத்தனை தண்டனை பெருமளவு
என்ன தவறிழைத்தேன் என் விதியில்???????

Wednesday, October 13, 2010

நெருக்கம்

என்னிடத்தில் நெருங்குவதாக
உனக்கு எண்ணமில்லை....



உன்னைவிட்டு விலகிடவே
எனக்கு விருப்பமில்லை...


எனினும்
நெருக்கத்தில் விருப்பமாய்
                                   நான்....
விருப்பத்தில் விலகியிருக்கும்
                                     நீ.

Tuesday, October 12, 2010

இழப்புகள்




எதையும் இழக்கவில்லை
ஏனோ வருந்துகிறேன்
எல்லாம்  இழந்ததாக  

Monday, October 11, 2010

உயிராக

சிரிக்கும்போது கூடவரும்
சொந்தங்கள்
சோகத்தில் தொலைந்தே
போகின்றன......

சொந்தமாய் உன்னை
நான் நினைத்ததில்லை

இன்று உணர்கிறேன்
உயிர்கூட  ஒருநாள்
நம்மைவிட்டு பிரியும்  என்பதை உன்னால்.....