Friday, December 10, 2010

இடையில் நான்

பலமுறை பட்டும்
    
      பாசத்தால் பலவினமாய் 
       
               உள்ளதால்  ஒதுக்கபட்டவளாய்
          
                            உறவுகளுக்கு இடையில்
                  
                                  உயிரற்ற்றவல்லாய்  

                                   நான்

Tuesday, November 9, 2010

மாற்ற தக்கதல்ல

நான் தனித்திருக்க
 நினைக்கவில்லை
நீயில்லாத என் வாழ்வினை
வளமாக்க விரும்புகிறாய்  நீ ....

உன் உறவுகளை
உன்னிடத்தில் சேர்த்து விட்டு
உற்சாகமாய்
 உல்லாசமாய்
உறவற்றவலாய்
உரைக்கிறேன்

முயற்சிக்காதே
உன்னை நான் வெறுத்துவிட

முடிவை நான் தருகிறேன்
மனிதனாய்    இருந்தல்ல
மிருகமாய் மாறாமல்

 காத்திருந்து கண்டுகொள்
முடிவை....

Thursday, October 28, 2010

மௌனமாய்

எதை நான் சொல்ல 
முயன்றலும் தலையில்
 அடித்து கொள்ள்கிறாய்

 இல்லை அழ
 ஆரம்பித்து விடுகிறாய்

என் தவறினை
திருத்தி கொள்ள
வழி தெரியவில்லை
வாய் இல்ல ஊமைபோல
 வாழ முயற்சிகிறேன்

தலை விதி

என்னை காலடி மண்ணாக கூட
நினைக்காத இவுலகில்
தலையில் தூக்கிவைத்து
தாலாட்டு பாடினாய்
இல்லாத கனவெல்லாம்
இதயத்தில் தள்ளாடின

இன்று நீ கூட  தள்ளி விட்டாய்
என்னை தரையிலே தனிமையிலே...


ஒரு நாள் போதும் நீ
எதையும்  தாங்கி கற்றுக்கொள்ள

நானும் முயற்சிக்கிறேன்
தனிமையை ரசித்து
இனிமையாய் இருக்க....

எல்லோரும் சொல்ல்கிறார்கள்
சொந்தத்தின் பலத்தை
சொல்லவதற்கு கூட யாருமில்லை
சொந்தமென்று எனக்காய்.....

இத்தனை தண்டனை பெருமளவு
என்ன தவறிழைத்தேன் என் விதியில்???????

Wednesday, October 13, 2010

நெருக்கம்

என்னிடத்தில் நெருங்குவதாக
உனக்கு எண்ணமில்லை....



உன்னைவிட்டு விலகிடவே
எனக்கு விருப்பமில்லை...


எனினும்
நெருக்கத்தில் விருப்பமாய்
                                   நான்....
விருப்பத்தில் விலகியிருக்கும்
                                     நீ.

Tuesday, October 12, 2010

இழப்புகள்




எதையும் இழக்கவில்லை
ஏனோ வருந்துகிறேன்
எல்லாம்  இழந்ததாக  

Monday, October 11, 2010

உயிராக

சிரிக்கும்போது கூடவரும்
சொந்தங்கள்
சோகத்தில் தொலைந்தே
போகின்றன......

சொந்தமாய் உன்னை
நான் நினைத்ததில்லை

இன்று உணர்கிறேன்
உயிர்கூட  ஒருநாள்
நம்மைவிட்டு பிரியும்  என்பதை உன்னால்.....

Saturday, October 9, 2010

மன்னித்துவிடு மலரே

எழுதிய கவிதையை 
உன்னிடத்தில் மறைக்க
எண்ணுவேன்....

எண்ணிய மறுகணமே
உன்னிடத்தில் காட்டுவேன் 

ஆனால் நீ கடமைக்காக
படிக்கையில் தான்
ஓரமாய்  அழுகிறது
இக்கவிதை ...

இனியாவது முயற்சிகிறேன்
எண்ணியதை எண்ணியபடி
செய்வதற்கு.....

புரியாமல் பிரிகிறேன்

உன்னை புரிந்துகொண்ட
நம்பிக்கையில் பெருமையில்
திரிந்தேன்......

உனக்கு பிடித்தவை எல்லாம்
இன்று பிடிக்காமல் போனதால்
தான்


புரிந்துகொள்ள்கிரேன்
உன்னை புரிந்துகொள்ளும்
உரிமை எனக்கு இன்னும்
கிடைக்கவில்லை என்று...

Friday, October 8, 2010

பிறக்கும் போதே இறப்பவள்

என்னை குழந்தை
என்றாய் - ஆனால்
எல்லோரிடத்தும் நீ 
குழந்தையாய் இருக்கிறாய்  

Thursday, October 7, 2010

மாற்றங்கள்

இழந்தாய் எத்தனையோ
                         எனக்காய்
நேற்று முதல்
                        ஏனோ
இழக்க மறுக்கிறாய் 
 இன்று முதல்
என்னோடு  வருவதற்கு...........

புரியவில்லை புத்திக்கு 
இதுவரை

என் மாற்றத்தின்   
             தோற்ற்றம் 

இருப்பினும் மாற்றிகொள்கிறேன் 
எனது எதிர்பார்ப்புகளை..

ஏற்றுகொள்ள்கிறேன்  
உன் மகிழ்ச்சியின்
ஏற்றத்தை.......

தூரமாய்

பலமுறை மகிழ்ந்திருக்கிறேன்
உன் குழந்தையாய் நானும்
என் தாயக நீயும்
உலவிய நாட்களில்
பெற்ற சுதந்திரத்தை
                                நினைத்து.......

ஏனோ  இன்று  கொஞ்சம் வலிக்கிறது
என் தாயிடத்தில் தள்ளி நின்று
பேச வேண்டும் சில நேரங்களில்
                                  என்றால்............

இதமான வலியில் இவள்

உன்னோடு நான் இருப்பதால்
நீ என்னை வெறுக்கிரையோ
என்று..... 

நினைத்து இருந்தேன் இதுவரை
என்னை விட பெரியதில்லை
உனக்கேதும்...

புரிந்து கொள்ளகிறேன் இனி
என்னை போல் தான்
நீயுமென்று

முதலாய்

எனக்காய் வந்துவிடு

எல்லாம் தந்துவிடு